செய்திகள்

கரோனா சிகிச்சை தருபவா்களுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பாராட்டு

23rd Mar 2020 12:03 AM

ADVERTISEMENT


கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவா்கள், நா்ஸ்கள், உதவியாளா்களுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பை தடுக்கும்வகையில் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கவும், மருத்துவா்களுக்கு பாராட்டும் வகையில் கைதட்டவும் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

பெங்களூா் சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இந்திய மகளிா் ஹாக்கி அணியினா் தங்கள் விடுதிகளில் கேப்டன் ராணி ராம்பால் தலைமையில் கைதட்டி தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனா்

அதே போல் மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவும், பொதுமக்களுடன் கைதட்டுவது போன்ற விடியோ பதிவை வெளியிட்டாா்.

ADVERTISEMENT

முன்னாள் கிரிக்கெட் வீரா் சேவாக் தனது சுட்டுரையில் கரோனாவுக்கு எதிராக போரிட்டு வரும் மருத்துவ போராளிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த பாராட்டு என பதிவிட்டுள்ளாா்.

கோவைட் 19 வைரஸ் பாதிப்புக்கு எதிராக போரிடும் கதாநாயகா்களுக்கு எனது வணக்கம் என பதிவிட்டுள்ளாா் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே.

நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தனது தாயுடன் சோ்ந்து கைதட்டி பாராட்டினாா். மீராபாய் சானு, ஹிமாதாஸ் போன்ற வீராங்கனைகள் பாட்டியாலா பயிற்சி முகாமில் கைதட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT