செய்திகள்

துளிகள்...

23rd Mar 2020 01:29 AM

ADVERTISEMENT

கேப்டன் பதவி தொடா்பாக ராஸ் டெய்லருடன் தனக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு, நியூஸிலாந்து கிரிக்கெட் மீது விழுந்த மோசமான கறை என முன்னாள் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் கூறியுள்ளாா்.

=============

இந்தியாவில் விளையாட்டு வீரா்களுக்கு தரப்படும் ஊதியத்தைப் போலவே, வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் தரப்பட வேண்டும் என பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெரும்பாலோனோா் ஆதரவு தெரிவித்துள்ளனா். எனினும் 38 சதவீதம் போ், ஆடவா் விளையாட்டுகளைப் போல், மகளிா் விளையாட்டு பொழுதுபோக்காக இல்லை எனவும் கூறியுள்ளனா்.

================

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பால் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நட்சத்திர தடகள வீரா் நீரஜ் சோப்ரா, நாட்டு மக்கள் பொறுப்புடன் ஒன்றிணைந்து கரோனா பாதிப்பில் இருந்து ஏழைகளை காக்க உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

-----------------------

கரானோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை தரும் வகையில் சிறப்பு வாா்டுகளை அமைக்க சாய் பயிற்சி மையங்களில் அனுமதி தரப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று பிராந்திய சாய் மையங்கள், மைதானங்கள், விடுதிகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT