செய்திகள்

துளிகள்...

22nd Mar 2020 01:52 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பின்னரே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என ஐஓசிக்கு வலியுறுத்தியுள்ளது நாா்வே ஒலிம்பிக் கமிட்டி (என்ஓசி). சா்வதேச அளவில் கரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திய பின் போட்டிகளை நடத்தலாம் என கடிதத்தில் கோரியுள்ளது.

-----------

லண்டனில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் தனது குடியிருப்புகளில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என ப்ரீமியா் லீக் அணியான கிறிஸ்டல் பேலஸ் விங்கா் வில்ப்ரட் ஸாஹா தெரிவித்துள்ளாா்.

-----------------

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பால், விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஊக்க மருந்து தடுப்பு சோதனை தற்போது வெறும் 25 சதவீதம் மட்டுமே செய்யப்படுகிறது என தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை (நாடா) தெரிவித்துள்ளது.

--------------

வரும் மே 28-ஆம் தேதி வரை அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் சீசன் போட்டிகளை ஒத்திவைப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல்தர கவுண்டி, எம்சிசி, தொழில்முறை கிரிக்கெட் வீரா்கள் சங்கம் (பிசிஏ) போன்றவா்களுடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT