செய்திகள்

வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராகிறார் சஞ்சய் பங்கர்!

19th Mar 2020 11:03 AM | எழில்

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய சஞ்சய் பங்கர் அடுத்ததாக வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி நிஸாமுத்தின் கூறியதாவது: பேட்டிங் ஆலோசகராகப் பணியாற்றும்படி சஞ்சய் பங்கரிடம் பேசியுள்ளோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதேபோல மற்றவர்களிடம் பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார். சஞ்சய் பங்கர் டெஸ்ட் அணிக்கான பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. அதுவரை ஒருநாள், டி20 அணிகளின் பேட்டிங் ஆலோசகராக உள்ள நீல் மெக்கன்ஸி, டெஸ்ட் அணிக்கும் பேட்டிங் ஆலோசகராகச் செயல்படவுள்ளார். 

2014 முதல் 2019 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றினார். வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக ஜுன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : Sanjay Bangar
ADVERTISEMENT
ADVERTISEMENT