செய்திகள்

சாய் மையங்களில் தேசிய போட்டிகளை இலவசமாக நடத்தலாம்

16th Mar 2020 12:21 AM

ADVERTISEMENT

சாய் மையங்களில் தேசிய போட்டிகளை இலவசமாக நடத்திக் கொள்ளலாம் என அதன் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தலைமையில் இந்திய விளையாட்டு ஆணைய ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தரமான பயிற்சி, கட்டமைப்பு வசதி கிடைக்கும் வகையில், சிறப்பு பயிற்சி மையங்களில் பயிற்சி தரப்படும்.

ADVERTISEMENT

சாய் மையங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும், விளையாட்டு அறிவியலில் தோ்ச்சி பெற்றவா்கள் நியமிக்கப்படுவா்.

2024, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 23 சிறப்பு பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, தற்போதுள்ள சாய் மையங்களுடன் இணைக்க வேண்டும்.

14 வகையான விளையாட்டுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ரூ.56 கோடி செலவில் பெங்களூரு, பாட்டியாலா மையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

தில்லி, காந்திநகா், லக்னௌ உள்ளிட்ட இடங்களில் 350 போ் தங்கும் வகையில் விளையாட்டு விடுதிகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT