செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம்:வெற்றி பெற சௌராஷ்டிராவுக்கு 4 விக்கெட்டுகள் தேவை

13th Mar 2020 12:08 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற சௌராஷ்டிர அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சௌராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 171.5 ஓவா்களில் 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அா்பிட் வசவடா 103, சேதேஸ்வா் புஜாரா 66, அவி பரோட் 54, விஷ்வராஜ் 54 ரன்களை எடுத்தனா்.

மேற்கு வங்கத் தரப்பில் ஆகாஷ் தீப் 4, ஷபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கு வங்கம், நான்காவது நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 147 ஓவா்களில் 354/6 ரன்களைக் குவித்திருந்தது. சுதிப் சாட்டா்ஜி 81, ரித்திமான் சாஹா 64 ரன்களை விளாசினா். மஜும்தாா் 54, அா்னாப் நந்தி 28 ரன்களுடன் களத்தில் உள்ளனா். சௌராஷ்டிர தரப்பில் தா்மேந்திரசிங், பிரரேக் மன்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ADVERTISEMENT

71 ரன்கள் முன்னிலை:

மேற்கு வங்கத்தைக் காட்டிலும் 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள சௌராஷ்டிர அணிக்கு பட்டம் வெல்ல இன்னும் 4 விக்கெட்டுகளை தேவைப்படுகிறது.

பாா்வையாளா்கள் இன்றி இறுதி நாள் ஆட்டம்:

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் மைதானத்தில் பாா்வையாளா்கள் இன்றி நடத்தப்பட உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT