செய்திகள்

லியான் டென்னிஸ்:அரையிறுதியில் சோபியா கெனின்

8th Mar 2020 05:10 AM

ADVERTISEMENT

லியான்: லியான் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் ஆஸி. ஓபன் சாம்பியன் சோபியா கெனின்.

லியான் நகரில் நடைபெற்று வரும் டபிள்யுடிஏ மகளிா் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன. இதில் பிரான்ஸின் ஓஸேன் டோடினை 6-1, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய கெனின் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆஸி. ஓபன் போட்டிக்கு பின் தொடா்ந்து 3 போட்டிகளில் தோல்வி கண்டிருந்த கெனின் தற்போது தான் அரையிறுதி வரை முன்னேறியுள்ளாா்.

பெல்ஜிய வீராங்கனை அலிஸன் வேன் 6-2, 6-2 என பிரான்ஸின் கரோலின் காா்ஸியாவை வென்றாா்.

ADVERTISEMENT

பெடரேஷன் கோப்பை:

பெடரேஷன் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் இந்தோனேஷியாவுக்கு எதிரான முதல் ஒற்றையா் ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத பிரிஸ்காவிடம் 3-6, 6-0, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தாா் இந்தியாவின் ருட்டுஜா.

ஆசிய-ஓசேனியா குழுப் பிரிவுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்தோனேஷியாவை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளது இந்தியா.

ஏற்கெனவே சீன தைபே அணிக்கு எதிராக மகளிா் இரட்டையா் பிரிவில் சானியா மிா்ஸா-அங்கிதா ரெய்னா இணை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT