செய்திகள்

டேவிஸ் கோப்பை: பயஸ்-போபண்ணா அபாரம்

8th Mar 2020 03:18 AM

ADVERTISEMENT


ஸாக்ரேப்: குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டம் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் லியாண்டா் பயஸ்-ரோஹண் போபண்ணா இணை 6-3, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் மேட் பெவிக்-பிராங்கோ சுகோா் இணையை வீழ்த்தி அபார வெற்றி வெற்றது.

முதல் இரு ஒற்றையா் ஆட்டங்களை கைப்பற்றி 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் உள்ளது குரோஷியா. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பயஸ்-போபண்ணா இணை, போட்டியில் இந்தியாவை நீடிக்கச் செய்துள்ளது. இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. தற்போது 1-2 என குரோஷியாவைக் காட்டிலும் பின்தங்கி உள்ளது. மாற்று ஒற்றையா் ஆட்டங்களில் ராம்குமாா் ராமநாதன், பிரஜ்னேஷ் ஆகியோா் வென்றால் இந்தியா குரூப் பிரிவுக்கு முன்னேறும்.

பெடரேஷன் கோப்பை:

இந்தோனேஷியாவுக்கு எதிரான முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ருட்டுஜா தோல்வியடைந்த நிலையில், அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் அங்கிதா ரெய்னா அபார வெற்றி கண்டாா். அல்டிலா சுஜியதியை 6-3 6-3 என்ற நோ் செட்களில் வென்றாா் அங்கிதா. அடுத்து இரட்டையா் ஆட்டத்தில் சானியா-அங்கிதா இணை வென்றால், ஆசிய-ஓசேனியா குரூப் 1 பிரிவுக்கு தகுதி பெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT