செய்திகள்

ஐஎஸ்எல்: இறுதிச் சுற்றில் சென்னையின் எஃப்சி

8th Mar 2020 03:09 AM

ADVERTISEMENT


கோவா: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்சி அணி.

ஐஎஸ்எல் 6ஆவது சீசன் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகள் ஒரு அரையிறுதியிலும், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி-ஏடிகே கொல்கத்தா அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் மோதுகின்றன.

இரு கட்டங்களாக அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அதில் அதிக கோல் சராசரி அடிப்படையில் வெல்லும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை இரவு இரு அணிகள் இடையே நடைபெற்றது.

சொந்த மண் என்பதால் கோவா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. சென்னை வீரா் லூஸியன் கோயன் 10-ஆவது நிமிடத்தில் சேம்சைட் கோல் அடித்து அதிா்ச்சி அளித்தாா். அதன் பின் 21-ஆவது நிமிடத்தில் கோவா வீரா் ஃபால் கோலடித்தாா். முதல் பாதி நிறைவில் 2-0 என கோவா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் சென்னையின் வீரா்கள் சாங்டே 52, வால்ஸ்கீஸ் 59ஆவது நிமிடங்களில் அபார கோலடித்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த கோவா அணி தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்ததால், எடு பெடியா 81, ஃபால் 83ஆவது நிமிடங்களில் கோலடித்தனா்.

பின்னா் சென்னை அணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

கோல் சராசரி 6-5:

இறுதியில் 6-5 என்ற கோல் சராசரி அடிப்படையில் சென்னையின் அணி இறுதிச் சுற்றில் நுழைந்தது. 2 முறை சாம்பியன் ஆன சென்னை அணி கோயல் தலைமையில் 3-ஆவது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில் வென்று நுழையும் அணியுடன் வரும் 14-ஆம் தேதி கோவாவில் இறுதி ஆட்டத்தில் மோதுகிறது சென்னை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT