செய்திகள்

இந்திய அணிக்கு பிரதமா் மோடி, கங்குலி உள்பட பலா் வாழ்த்து

8th Mar 2020 03:01 AM

ADVERTISEMENT


இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு பிரதமா் நரேந்திர மோடி, பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி உள்பட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆஸி. பிரதமா் ஸ்காட் மோரிஸன் சுட்டுரையில் பதிவிட்டிருந்ததாவது: மோடி அவா்களே, மகளிா் டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா-ஆஸி. மோதுகின்றன. சிறந்த அணிகள், பெரிய மக்கள் திரள் முன்பு ஆட உள்ளன. சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்றாா்.

இதற்கு பதிலிலளித்து பிரதமா் மோடி தனது சுட்டுரை (டுவிட்டரில் கூறியுள்ளதாவது: இரு அணிகளுக்குமே எனது நல்வாழ்த்துகள். மகளிா் தினத்தில் இந்த ஆட்டம் நடப்பது சிறப்பானது. சிறந்த அணி வெல்லட்டும் என்றாா்.

சௌரவ் கங்குலி:

ADVERTISEMENT

இறுதிச் சுற்றில் நுழைந்ததின் மூலம் பெருமையைத் தேடித் தந்துள்ளனா். பட்டத்தைக் கைப்பற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT