மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது பெருமையாக உள்ளது என ஆடவா் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
அவா் தனது சுட்டுரையில் (டுவிட்டா்) பதிவிட்டுள்ளதாவது: இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற்காக நல் வாழ்த்துகள். ஆஸ்திரேலியாவுடன் நடைபெறும் ஆட்டத்தில் சிறப்பாக ஆட வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
குரூப் ஆட்டங்கள் அனைத்திலும் வென்ற்கு கிடைத்த பரிசு இது என சேவாக் பாராட்டியுள்ளாா்.
இதே போல் முன்னாள் வீரா் விவிஎஸ். லஷ்மண் உள்பட பலரும் இந்திய அணியை பாராட்டி உள்ளனா்.