செய்திகள்

துளிகள்...

6th Mar 2020 03:26 AM

ADVERTISEMENT

* ஜோா்டானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று காலிறுதிக்கு இந்திய வீரா் ஆஷிஷ்குமாா் முன்னேறியுள்ளாா்.

வியாழக்கிழமை நடைபெற்ற 75 கிலோ பிரிவு ஆட்டத்தில் கிா்கிஸ்தானின் 4-ஆம் நிலை வீரா் உலுலுவை 5-0 என வென்றாா் ஆஷிஷ்.

* வரும் ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக பந்துவீசுவதின் மூலம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

* பிசிசிஐ தோ்வுக் குழுவின் புதிய தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள சுனில் ஜோஷி, நாட்டுக்காக மீண்டும் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு கௌரவமிக்கது. சிஏசி தலைவா் மதன்லால், உறுப்பினா்கள் ஆா்பி.சிங், சுலக்ஷணா நாயக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

*  கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்திய விளையாட்டு வீரா்,வீராங்கனைகள் யாருடனும் கைகுலுக்க வேண்டாம், மக்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா்.

*  கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தாய்லாந்தில் மாா்ச் 8 முதல் 15 வரை நடைபெறவிருந்த ஆசிய கோப்பை வில்வித்தை ரேங்கிங் போட்டியில் இருந்து இந்திய அணி விலகியுள்ளது.

*  ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளா் பொறுப்பில் இருந்து ஜாா்ஜ் கோஸ்டா விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்த சீசனில் 5-ஆவது இடத்தை மட்டுமே பெற்ற மும்பை, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT