செய்திகள்

வீட்ல புலி, வெளில எலி: ‘சேனா’ நாடுகளில் தொடர்ந்து தடுமாறும் இந்திய கிரிக்கெட் அணி!

2nd Mar 2020 11:42 AM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும் நியூஸிலாந்து அணி 235 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணி, 124 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து நியூஸிலாந்து அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி, 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து டெஸ்டையும் தொடரையும் வென்றது.

இந்தத் தோல்வி மூலம் சேனா நாடுகளில் (SENA - South Africa, England, New Zealand & Australia) என்று சொல்லப்படுகிற தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. கடந்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தாலும் பொதுவாகவே சேனா நாடுகளில் எப்போதும் மோசமாகவே விளையாடி வருகிறது. கோலி கேப்டனான பிறகும் இது மாறவில்லை என்பதே புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.

ADVERTISEMENT

சேனா நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி தான் அதிக தோல்விகளையும் அடைந்துள்ளார். அதாவது மற்ற கேப்டன்களை விடவும் கோலிக்குத்தான் தோல்வியின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. கோலியை விடவும் சேனா நாடுகளில் அதிக ஆட்டங்களில் தலைமை வகித்த தோனி, கோலியை விடவும் குறைவான தோல்வி சதவிகிதத்தையே வைத்துள்ளார். யார் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணி சேனா நாடுகளில் தடுமாற்றத்தையே சந்திக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த கேப்டன்களின் கீழ் சேனா நாடுகளில் இந்திய அணி பெற்ற வெற்றி தோல்விகள்:
 

 கேப்டன்  ஆட்டங்கள்  வெற்றி   தோல்வி   டிரா   வெற்றி%   தோல்வி% 
 கோலி  16  4  10  2  25%  62.5%
 தோனி  23  3  14  6  13.04%  60.87%
 டிராவிட்  6  2  2  2  33.33%  33.33%
 கங்குலி  12  2  5  5  16.67%  41.67%

 

Tags : Virat Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT