செய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்க? பதில் சொல்லுங்க: பத்திரிகையாளரிடம் கடுகடுத்த விராட் கோலி

2nd Mar 2020 02:28 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும் நியூஸிலாந்து அணி 235 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணி, 124 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து நியூஸிலாந்து அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி, 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து டெஸ்டையும் தொடரையும் வென்றது.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரிடம் விராட் கோலி கோபமாகப் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று, வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்தபிறகு மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டார் கோலி. இதுகுறித்து கோலியிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். வில்லியம்சன் ஆட்டமிழந்த பிறகு அவரைப் பார்த்தும் ரசிகர்களைப் பார்த்தும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டீர்கள். ஒரு கேப்டனாக நீங்கள் முன்னுதாரணமாகச் செயல்படவேண்டும். ஆக்ரோஷத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றார். 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் கோலி.

நான் உங்களிடம் கேள்வி எழுப்பினேன் என்றார் பத்திரிகையாளர்.

உங்களிடம் பதிலைக் கேட்கிறேன் என்று கோலி. அவர் முகமே அந்தக் கேள்வியை அவர் விரும்பவில்லை என்று காட்டியது.

நீங்கள் அவ்வாறு நடந்துகொண்டதாகச் சில செய்திகள் வெளியாகின. எனவே நீங்கள் முன்னுதாரணமாகச் செயல்படவேண்டும் அல்லவா?

என்ன நடந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும். பிறகு சரியாக கேள்வியுடன் வரவேண்டும். பாதிக் கேள்வி, பாதி பதிலுடன் இங்கு வரக்கூடாது. அதே போல நீங்கள் சர்ச்சை செய்ய விரும்பினால், இது அதற்கான இடமல்ல. நான் ஆட்ட நடுவரிடம் பேசினேன். நடந்தது பற்றி அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்.

Tags : Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT