செய்திகள்

கரோனாவால் உயிரிழந்த கிரிக்கெட் முன்னாள் வீரர்

29th Jun 2020 02:10 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தில்லி கிரிக்கெட் முன்னாள் வீரர் சஞ்சய் தோபல் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 52.

இத்தகவலை தில்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. 

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தோபல், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று வாரங்கள் கழித்துதான் கரோனா வைரஸ் தொற்று அவருக்கு இருந்தது உறுதியானது. கரோனா வைரஸ் தொற்று அவரிடம் இருந்தது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் தோபல் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சித்தாந்த், ராஜஸ்தானுக்காக முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இளைய மகன் எகான்ஷ், தில்லி யு-23 அணியில் இடம்பிடித்துள்ளார். 

ADVERTISEMENT

சஞ்சய் தோபல், ரஞ்சி ஆட்டங்களில் விளையாடாமல் போனாலும் ஏர் இந்தியா கிளப் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். தில்லி ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளராகவும் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் உள்ளூர் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT