செய்திகள்

கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு வாழ்க்கை உண்டு: புஜாராவுக்குக் கற்றுக்கொடுத்த டிராவிட்

27th Jun 2020 01:25 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு வாழ்க்கை உண்டு என்பதை ராகுல் டிராவிட் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக புஜாரா கூறியுள்ளார்.

க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் புஜாரா கூறியதாவது:

டிராவிட் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. ஆனால், அவர் வழியைப் நான் பிரதி எடுக்கவில்லை. எங்களுடைய ஆட்டத்தில் ஒற்றுமை இருக்கும். ஆனால் அவர் எனக்குப் பிடித்தமானவர் என்பதால் உருவானதல்ல அது. 

ADVERTISEMENT

சதமடித்தால் மட்டும் போதாது, அணிக்காகத் தொடர்ந்து ஆடுகளத்தில் நின்று ஆடவேண்டும் என்பது செளராஷ்டிர அணியில் விளையாடும்போது கற்றுக்கொண்ட பழக்கம். அவர் என்மீது செலுத்திய தாக்கத்தில் சிந்தனையும் அவரைப் போலவே மாறியது.

ராகுல் டிராவிட் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒருவரியில் என்னால் சொல்லிவிட முடியாது. எனக்கு எப்போது ஊக்கம் அளிப்பவராக உள்ளார். எப்போதும் அவர் அப்படித்தான் இருப்பார். 

கிரிக்கெட்டிலிருந்து என் சிந்தனையை அப்புறப்படுத்த அவர் உதவினார். அவரிடம் இதுபற்றி பேசியபோது ஒரு தெளிவு கிடைத்தது. கவுன்டி கிரிக்கெட்டிலும் இதைக் கண்டுள்ளேன். தொழில்முறை கிரிக்கெட், சொந்த வாழ்க்கை இரண்டையும் தனித்தனியே வைத்திருப்பார்கள். கிரிக்கெட்டில் நான் கவனமுடன் இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர எனக்குத் தெரியும். கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு வாழ்க்கை உண்டு. பேட்டிங்கில் தொழில்நுட்பத்தைத் தாண்டி வேறு சில விஷயங்களும் உள்ளன என்பதை என் ஆரம்பக் காலத்தில் டிராவிட் எனக்குக் கற்றுக்கொடுத்தார் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT