செய்திகள்

2023 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ள ஆஸ்திரேலியா & நியூசிலாந்து!

26th Jun 2020 10:36 AM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.

2023 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவது குறித்த முடிவில் 22 வாக்குகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்குச் சாதகமாக வந்தன. கொலம்பியாவுக்கு 13 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளதாக ஃபிஃபா அமைப்பு கூறியுள்ளது.

2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 

ADVERTISEMENT

2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT