செய்திகள்

கரோனா வைரஸ் நிஜமானது: பாதிக்கப்பட்ட கால்பந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை!

20th Jun 2020 12:44 PM

ADVERTISEMENT

 

பொலிவியா நாட்டின் கால்பந்து முன்னாள் வீரர் ஜூலியோ சீசர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொலிவியாவில் கரோனா வைரஸால் இதுவரை 21,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 697 பேர் இறந்துள்ளார்கள். 

இந்நிலையில் பொலிவியா நாட்டின் கால்பந்து முன்னாள் வீரர் ஜூலியோ சீசர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரால் எங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வந்துவிடுவோம் என நம்பிக்கை உள்ளது. என் பெற்றோருக்கும் பாசிடிவ் முடிவு வந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ளேன். 

கரோனா வைரஸ் நிஜமானது. அனைவரும் தங்களது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணியுங்கள் என்று கூறினார். 

பொலிவியா நாட்டுக்காக 85 சர்வதேச ஆட்டங்களில் 48 வயது ஜூலியோ சீசர் விளையாடியுள்ளார். 2015, 2016-ம் ஆண்டுகளில் பொலிவியா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அர்ஜெண்டினாவின் நெவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ், ஜப்பானின் மரினோஸ் கிளப்புகளிலும் பங்கேற்றுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT