செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் இடைநீக்கம்!

17th Jun 2020 01:57 PM

ADVERTISEMENT

 

லடாக் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் பதிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். இந்த மோதலில் சீன தரப்பில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்தினா் இடையேயான மோதலில் உயிரிழப்பு ஏற்படுவது 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

கரோனா நோய்த்தொற்று நிவாரண நடவடிக்கைகளுக்கு பொது மக்கள், நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிஎம் கோ்ஸ் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் உருவாக்கியது. அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும், உறுப்பினா்களாக பாதுகாப்பு, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சா்களும் உள்ளனா். 

ADVERTISEMENT

இந்நிலையில் லடாக் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் பதிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் மது தொட்டபிளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லடாக் பிரச்னை மற்றும் பிஎம் கோ்ஸ் ஆகியவற்றைக் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்தியதாகக் கூறி சிஎஸ்கே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி சிஎஸ்கே ட்வீட் வெளியிட்டுள்ளதாவது:

மது தொட்டபிளில் வெளியிட்ட ட்வீட் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படாமல் வெளியிடப்பட்ட அவருடைய தவறான ட்வீட்டுக்காக வருந்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT