செய்திகள்

சென்னை பயிற்சி முகாமில் சச்சினை அசத்திய இளம் யுவ்ராஜ் சிங்

11th Jun 2020 11:27 AM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு வெற்றிகளுக்கு வித்திட்ட யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஒரு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இதையடுத்து யுவ்ராஜைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியதாவது:

யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற்று ஒரு வருடமாகிவிட்டது. உங்களை முதலில் பார்த்த நினைவு என்றால் - சென்னைப் பயிற்சி முகாமில் ஃபீல்டிங் பயிற்சியின்போது பாயிண்ட் பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் செயல்பட்டீர்கள். உங்களுடைய சிக்ஸர் அடிக்கும் திறமையைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, உங்களால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்றார்.

ADVERTISEMENT

304 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடி 8701 ரன்களும் 40 டெஸ்டுகளில் விளையாடி 1900 ரன்களும் 58 டி20 ஆட்டங்களில் விளையாடி 1177 ரன்களும் யுவ்ராஜ் சிங் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதங்களும் ஒருநாள் ஆட்டங்களில் 14 சதங்களும் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT