செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அடையாளப் போராட்டம் நடத்தப்படுமா?: மே.இ. தீவுகள் கேப்டன் பதில்

11th Jun 2020 10:46 AM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளில் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் குறித்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:

ADVERTISEMENT

எங்கள் அணி வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல பல வழிகளிலும் ஊக்கம் கொண்டுள்ளார்கள். மே.இ. தீவுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்பு எங்களைப் பற்றி பலவிதமாகப் பேசியதால் எங்கள் அணி வீரர்கள் ஊக்கமடைந்து வெற்றிக்குப் பாடுபட்டார்கள். கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுவோமா எனக் கேட்கிறீர்கள். அணியுடன் கலந்து பேசிய பிறகுதான் இதுபற்றி முடிவெடுப்போம். விளையாட்டில் நிறவெறித் தாக்குதல்கள் உண்டு. அனைவரும் சமத்துவதை நிலைநாட்டப் பாடுபடவேண்டும் என்றார்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: ஜூலை 8-12, ஏஜஸ் பெளல்

2-வது டெஸ்ட்: ஜூலை 16-20, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட்

3-வது டெஸ்ட்: ஜூலை 24-28, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட்

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT