செய்திகள்

எல்லா ஐபிஎல் ஆட்டங்களும் எல்லா வீரர்களும் வேண்டும்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி

11th Jun 2020 02:12 PM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அனைத்து ஆட்டங்களும் இடம்பெற்று, அதில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் பற்றி அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி உலகளவில் புகழ் பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இந்திய வீரர்கள் தான் முதுகெலும்பாக இருந்தாலும் வெளிநாட்டு வீரர்களும் அதன் வெற்றியில் பங்களித்துள்ளார்கள். சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பேட் கம்மின்ஸ், மார்கன் போன்ற வீரர்களால் எங்கள் அணி கூடுதல் பலம் பெறுகிறது.  எல்லா அணிகளிலும் இதே நிலைதான்.

ADVERTISEMENT

எனவே ஐபிஎல் போட்டியின் கட்டமைப்பில் நாம் மாற்றம் செய்யக்கூடாது. இதன் கட்டமைப்பினால் தான் அதிகப் புகழை அடைந்துள்ளது.

கேகேஆர் அணி சார்பாக மட்டுமல்லாமல் அனைத்து அணி சார்பாகவும் நான் கூறிக்கொள்வது - இந்த வருட ஐபிஎல் போட்டியில் எங்களுக்கு எல்லா ஆட்டங்களும் எல்லா வீரர்களும் வேண்டும். எப்போது ஐபிஎல் நடைபெற்றாலும் இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் ஐபிஎல் தொடர்பாக கங்குலி கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT