செய்திகள்

ஐபிஎல் போட்டி இந்த வருடம் நடைபெறும்: கங்குலி நம்பிக்கை

11th Jun 2020 12:30 PM

ADVERTISEMENT

 

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் ஐபிஎல் தொடர்பாக கங்குலி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அது காலி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் சரி. ரசிகர்கள், அணிகள், வீரர்கள், தொலைக்காட்சிகள், விளம்பரதாரர்கள் என அனைவரும் இந்த வருட ஐபிஎல் போட்டிக்காக ஆவலுடன் உள்ளார்கள்.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனவே ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்த முடிவை விரைவில் எடுப்போம் என்று கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT