செய்திகள்

அயர்லாந்தை எளிதாக வென்ற இங்கிலாந்து: முதல் ஒருநாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

31st Jul 2020 10:26 AM

ADVERTISEMENT

 

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த மார்ச் 13 அன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இதன்பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனால் கடந்த 139 நாள்களாக சர்வதேச ஒருநாள் ஆட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியது. முதல் ஒருநாள் ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெற்றது. இதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச ஒருநாள் ஆட்டத்தைக் காணாமல் இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் பரபரப்பான ஒருநாள் ஆட்டங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த ஒருநாள் தொடர், உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி மைதானத்தில் 3 ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஆர்ச்சர், மார்க் வுட், ஜாஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. எனினும் இயன் மார்கன், ஜேசன் ராய், மொயீன் அலி, பேர்ஸ்டோவ் எனப் பிரபல வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT