செய்திகள்

கடந்த 20 வருடங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க முடியாத இரு நாடுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள்!

DIN

மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்ததையடுத்து கடந்த 20 வருடங்களில் இரு நாடுகளின் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியாமல் உள்ளார்கள். 

1994-ல் அம்ப்ரோஸ் 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். இதன்பிறகு இந்த இலக்கை எட்ட அடுத்த மே.இ. தீவுகள் பந்துவீச்சாளருக்கு 26 வருடங்கள் ஆகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 1 ரன்னில் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை அவர் அடைந்தார். இந்த உயரத்தை எட்டியுள்ள 9-வது மே.இ. வீரர் என்கிற பெருமையை எட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வேகப்பந்து பந்துவீச்சாளர்களால் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற கடினமான இலக்கை அடைய முடியாமல் உள்ளார்கள். வங்கதேச டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இது பெரிய சவால் தான். ஆனால் வேகப்பந்துவீச்சுக்குப் பிரபலமான பாகிஸ்தானாலும் இந்தப் பெருமையை அடைய முடியாமல் போனது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT