செய்திகள்

அம்ப்ரோஸுக்கு அடுத்ததாக சாதித்த மே.இ. தீவுகள் வீரர்: கெமர் ரோச்சுக்கு 200 டெஸ்ட் விக்கெட்டுகள்!

25th Jul 2020 04:32 PM

ADVERTISEMENT

 


1994-ல் அம்ப்ரோஸ் 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். இதன்பிறகு இந்த இலக்கை எட்ட அடுத்த மே.இ. தீவுகள் பந்துவீச்சாளருக்கு 26 வருடங்கள் ஆகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 1 ரன்னில் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை அவர் அடைந்தார். இந்த உயரத்தை எட்டியுள்ள 9-வது மே.இ. வீரர் என்கிற பெருமையை எட்டியுள்ளார்.

சமீபகாலமாக விக்கெட்டுகள் எடுக்காமல் தடுமாறி வந்தார் ரோச். 2019 செப்டம்பர் 1 அன்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அன்றைய தினம் டக் அவுட் ஆனார் கோலி. அந்த டெஸ்டில் மே.இ. தீவுகள் அணி தோற்றாலும் மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரோச். அதற்குப் பிறகு 521 பந்துகளைத் தொடர்ச்சியாக வீசிய பிறகுதான் அவருக்கு அடுத்த விக்கெட் கிடைத்தது. 86.5 ஓவர்கள் வரை ஒரு விக்கெட்டும் கிடைக்காமல் பந்து வீசிய ரோச், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பெருமூச்சு விட்டார்.  2009 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த மே.இ. தீவுகள் வீரர்கள்

வால்ஷ் - 519
அம்ப்ரோஸ் - 405
மார்ஷல் - 376
கிப்ஸ் - 309
கார்னர் - 259
ஹோல்டிங் - 249
சோபர்ஸ் - 235
ராபர்ட்ஸ் - 202
ரோச் - 200*

ADVERTISEMENT
ADVERTISEMENT