செய்திகள்

காலி மைதானத்தில் வெள்ளைப் பந்தைப் பார்ப்பதில் சிக்கல் இருப்பதாக அயர்லாந்து வீரர்கள் புகார்!

25th Jul 2020 03:42 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் விளையாடப்பட்டு வருகின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இதற்கு அடுத்ததாக அடுத்த வாரம் முதல் அயர்லாந்து அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள 3 ஆட்டங்களும் செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் புதிய புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள் அயர்லாந்து வீரர்கள்.

ADVERTISEMENT

காலி மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள வெள்ளை வண்ண இருக்கைகளால் வெள்ளைப் பந்தைப் பார்ப்பதும் கேட்ச் பிடிப்பதும் சவாலாக உள்ளதாக அயர்லாந்து வீரர்கள் புகார் கூறியுள்ளார்கள். இங்கிலாந்து பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்டும் கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் இதுகுறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

எனினும் 3 ஒருநாள் ஆட்டங்களும் பகலிரவாக நடைபெறுவதால் மதிய வேளையில் மட்டும் தான் இந்தச் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்தப் புகாரால் இருக்கைகளைத் துணி கொண்டு மூடுவதற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை. இதனால் இந்தச் சிக்கலை எதிர்கொள்ள வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கப்படும் என கேப்டன் ஆண்டி கூறியுள்ளார்.  

Tags : white ball
ADVERTISEMENT
ADVERTISEMENT