செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த தங்கத்தை கரோனா போராளிகளுக்கு அர்ப்பணித்த ஹிமா தாஸ்

25th Jul 2020 02:40 PM

ADVERTISEMENT

 

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். ஆனால், தங்கம் வென்ற அணியில் இடம்பெற்ற கெமி அடேகொயா ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அந்த ஓட்டத்தில் முதலிடம் பிடித்த பஹ்ரைன் அணியினரிடமிருந்து தங்கம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத்தை கரோனா போராளிகளுக்கு அர்ப்பணிப்பதாக ஹிமா தாஸ் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற எங்களுக்குத் தங்கம் கிடைத்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட கரோனா போராளிகளுக்கு இந்தத் தங்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT