செய்திகள்

தோனி மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்: பிரபல பாட்மிண்டன் வீரர்

25th Jul 2020 12:22 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் தோனி மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலாக உள்ளதாக பிரபல பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து பிரபல பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கூறியதாவது:

ஐபிஎல் 2020 போட்டி நடைபெறும் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தோனி மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலாக உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களைப் பரிந்துரைக்கின்றன. இதன்படி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Tags : dhoni IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT