செய்திகள்

ஆச்சர்யம், ஆனால் உண்மை: ஏழு மேட்ச் பாயிண்ட்களைத் தாண்டி, அரையிறுதிக்குள் நுழைந்த ரோஜர் ஃபெடரர்!

28th Jan 2020 04:08 PM | எழில்

ADVERTISEMENT

 

மெல்போர்னில் நடைபெற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஏழு மேட்ச் பாயிண்ட்களிலிருந்து தப்பித்து, போராடி வென்றுள்ளார் முன்னணி வீரர், ரோஜர் ஃபெடரர்.

காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரெனை எதிர்கொண்டார் ஃ பெடரர். முதல் மூன்று செட்களில் 2-ல் வென்று அதிர்ச்சியளித்தார் டென்னிஸ்.

அடுத்த செட், டை பிரேக்கருக்குச் சென்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும் கடைசி இரு செட்களைப் போராடி வென்று, ஏழு மேட்ச் பாயிண்ட்களிலிருந்து தப்பித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஃபெடரர். இந்த ஆட்டம், மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. காயம் காரணமாக ஆட்டத்தின்போது அவதிப்பட்டார் ஃபெடரர். எனினும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். 

ADVERTISEMENT

நான் இன்று மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார் ஃபெடரர். 

Tags : Roger Federer
ADVERTISEMENT
ADVERTISEMENT