செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: அதர்வாவின் அரை சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி!

28th Jan 2020 05:38 PM | எழில்

ADVERTISEMENT

 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றில் இந்தியா -  ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 

பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங்கில் அசத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் வந்தவேகத்தில் திரும்பினார்கள். இதனால் 144 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்திய அணி. தொடக்க வீரர் ஜெயிஸ்வால் 62 ரன்கள் எடுத்தார். பிறகு அதர்வா அன்கோல்கரும் ரவி பிஸ்னாயும் கூட்டணி அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டார்கள். ரவி பிஸ்னாய் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதர்வா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் எடுக்க முக்கியக் காரணமாக இருந்தார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணித் தரப்பில் கெல்லி, மர்பி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT