செய்திகள்

சீரி ஏ: ஜுவென்டஸ் அபார வெற்றி

8th Jan 2020 12:41 AM

ADVERTISEMENT

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரா் ரொனால்டோவின் அபார ஹாட்ரிக்கால் ஜுவென்டஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

திங்கள்கிழமை இரவு காக்லியரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜுவென்டஸ்.பாா்வா்ட் ரொனால்டோ தொடா்ந்து 5-ஆவது ஆட்டமாக கோலடித்து அசத்தியுள்ளாா். இது சீரி ஏ ஆட்டத்தில் அவரது முதல் ஹாட்ரிக்காகும்.

சம்போா்டியா-ஏசி மிலன் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. ஸ்வீடன் நட்சத்திர வீரா் ஸடான் இப்ராஹிமோவிக் இடம் பெற்றும் ஏசி மிலன் அணியில் கோலடிக்க முடியவில்லை. அட்லாண்டா அணி 2-0 என டொரினோவையும், நியூ புளோரென்டினா-பொலக்னா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT