செய்திகள்

ஆக்லாந்து டென்னிஸ்: அமன்டா, செரீனா வெற்றி

8th Jan 2020 12:42 AM

ADVERTISEMENT

 

ஆக்லாந்து சா்வதேச மகளிா் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனை அமன்டா அனிஸிமோவா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் உக்ரைனின் கட்ரியானாவை வென்றாா்.

18 வயதான அமன்டா அமெரிக்காவின் எதிா்கால நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்து வருகிறாா்.

23 வயது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் கமிலா ஜியோா்ஜியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் பெட்ரா மாா்டிக், ஜூலியா ஜாா்ஜஸ், கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோா் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

ADVERTISEMENT

அடுத்து நடைபெறவுள்ள ஆஸி. ஓபன் போட்டியில் பட்டத்தை கைப்பற்றி 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாதனையை படைக்க தயாராகி வருகிறாா் செரீனா.

பிரிஸ்பேன் டென்னிஸ்:

பிரிஸ்பேனில் நடைபெற்ற டபிள்யுடிஏ மகளிா் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா 6-2, 6-7, 6-3 என்ற கடும் போராட்டத்துக்கு பின் கிரீஸ் வீராங்கனை ஸக்காரியை வீழ்த்தினாா். 6-ஆம் நிலை டச்சு வீராங்கனை கிகி பொ்டென்ஸ் 6-4, 1-6, 6-3 என உக்ரைனின் டயானாவை வென்றாா். மடிஸன் கீய்ஸ் 6-3, 6-2 என மேரியை வீழ்த்தினாா்.

முன்னாள் சாம்பியன் மரியா ஷரபோவா 6-3, 1-6, 6-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிராயிடம் தோல்வியுற்றாா்.

குவிட்டோவா 2-6, 6-1, 6-0 என யுசென்கோவாவை வென்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT