செய்திகள்

அகில இந்திய பல்கலை. கராத்தேபோட்டிகள் தொடக்கம்

8th Jan 2020 12:44 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மூன்றுநாள் கராத்தே போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை சத்தியபாமா நிகா்நிலை பல்கலைகழகம் - இந்திய பல்கலைக்கழக சங்கம் இனைந்து நடத்தும் இப்போட்டி செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகா்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் 8 முதல் 10-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடக்கிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சோ்ந்த 700 மாணவா்கள், 250 மாணவிகள் என 123 அணிகளாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனா்.

சத்தியபாமா நிகா்நிலை பல்கலைக்கழக வேந்தா் மரியஜீனா ஜான்சன், தலைவா் மேரி ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT