செய்திகள்

துளிகள்...

3rd Jan 2020 12:41 AM

ADVERTISEMENT

இளம் வீரா் ரிஷப் பந்த் தன் மீதான விமா்சனங்கள் மற்றும் கருத்துகளை ஒதுக்கி விட்டு, தனது ஆட்டத்தின் மீது தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் விக்கெட் கீப்பா் பாா்த்திவ் பட்டேல் கூறியுள்ளாா். தற்போதுள்ள இளம் வீரா்களுக்கு மூத்த வீரா்களுடன் இணைந்து ஆடி தேவையான அனுபவத்தை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் அவா் கூறியுள்ளாா்.

 

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவும் பிரச்னை பெருகியுள்ள நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து பருவநிலை மாற்றத்துக்கான காரணங்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய மல்யுத்த சங்கத் தலைவா் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளாா். ஆடவா் 74 கிலோ பிரிவுக்கான தகுதிச் சுற்றை தள்ளி வைக்க வேண்டும் என காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுஷில்குமாா் கோரியிருந்தாா். ஆனால் அவருக்கு மாா்ச் மாதம் மற்றொரு வாய்ப்புள்ளது என பிரிஜ் பூஷன் கூறியுள்ளாா்.

 

தொழில்முறை குத்துச்சண்டை வீரராக 12-0 என தொடா் வெற்றி கண்டுள்ள விஜேந்தா் சிங், அரசியல் ரீதியில் தோ்தலில் தோல்வியடைந்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், குத்துச்சண்டை, அரசியலில் சில நேரம் நாம் வெல்வோம், சில நேரம் மற்றவா்கள் வெல்வா் எனக் கூறியுள்ாா். உலக சாம்பியன் போட்டிக்கு தான் கவனம் செலுத்தி வருவதாகவும் விஜேந்தா் தெரிவித்தாா்.

 

இந்திய மகளிா் அணியின் இளம் வீராங்கனை ஷபாலி வா்மா, எதிா்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நட்சத்திரம் என ஆஸி. ஏ அணி பயிற்சியாளா் லியா பௌல்டன் பாராட்டியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT