செய்திகள்

3-ஆவது யூத் ஒருநாள்: இந்தியா தோல்வி

1st Jan 2020 03:46 AM

ADVERTISEMENT

ஈஸ்ட் லண்டன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மூன்றாவது யூத் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களை வென்று இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதற்கிடையே மூன்றாவது ஆட்டம் ஈஸ்ட் லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதைத் தொடா்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 192/8 ரன்களை குவித்தது. தொடக்க வரிசையில் 50 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகள் சரிந்தன. பின்னா் பிரியம் காா்க் 52, திலக் வா்மா 25, ஆகியோா் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தினா். தென்னாப்பிரிக்க தரப்பில் மோல்ஸ்டேன் 2-36 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

193 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

அந்த அணியில் ஜோனத்தான் போ்ட் 88, ஆன்ட்ரு லோவ் 31 ரன்களை விளாசினா். இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-40 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT