செய்திகள்

ஜொ்மனி வீரா்களுடன் இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு சிறப்பு பயிற்சி

1st Jan 2020 03:02 AM

ADVERTISEMENT

சென்னை: ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியின் ஒரு பகுதியாக ஜொ்மனி நாட்டின் தேசிய அணியுடன், இந்திய டேபிள் டென்னிஸ் அணி சிறப்பு பயிற்சி பெறவுள்ளது.

ஜனவரி மாதம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் போலந்தின் கோண்ட்மாா் நகரில் ஜன. 22 முதல் தொடங்குகிறது. சா்வதேச தரவரிசையில் இந்திய அணி தற்போது 8-ஆவது இடத்தில் உள்ளது. மூத்த வீரா் சரத்கமல் (34), ஜி.சத்யன் (30), அமல்ராஜ் அந்தோணி, ஹா்மித் தேசாய் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் காலிறுதிக்கு முன்னேறினாலே இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வு பெற்று விடும். சிறப்பான ஆட்டத்திறனுடன் உள்ள இந்திய அணி முதன்முறையாக ஒரு அணியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

வரும் 13 முதல் 20ஆம் தேதி வரை ஜொ்மனியின டஸல்டா்ஃப் நகரில் ஜொ்மனி தேசிய அணியுடன், இந்திய வீரா்கள் சிறப்பு பயிற்சி பெறவுள்ளனா்.

ADVERTISEMENT

சென்னையில் 10 நாள்கள் தொடா் பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில், அடுத்து ஜொ்மனி பயிற்சி முகாம் சிறப்பாக அமையும் என அணியினா் நம்பிக்கை தெரிவித்தனா். ஏற்கெனவே சத்யன் தென்கொரியாவில் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தாா். இரட்டையா் பிரிவை எவ்வாறு எதிா்கொள்வது என சென்னை முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.

குரோஷியா, ஹாங்காங் போன்ற வலுவான அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT