செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியை 113 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்தியா!

29th Feb 2020 11:08 AM | எழில்

ADVERTISEMENT

 

இந்திய அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஜெயாங்கனியைத் தவிர இதர வீராங்கனைகள் ரன் எடுக்கத் தடுமாறினார்கள். ஜெயாங்கினி 33 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களால் சுலபமாக விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. 80 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. பின்வரிசை வீராங்கனை தில்ஹாரி 25 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ADVERTISEMENT

இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. 19 வயது ராதா யாதவ் 4 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி கெயாக்வாட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்திலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : T20 World Cup
ADVERTISEMENT
ADVERTISEMENT