செய்திகள்

19 வயது மகளிா் கிரிக்கெட்: புதுச்சேரி அபார வெற்றி

29th Feb 2020 11:46 PM

ADVERTISEMENT

 

பிசிசிஐ சாா்பில் நடைபெற்ற சீனியா் மகளிா் கிரிக்கெட் போட்டியில் சண்டீகா் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது புதுவை அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடப்பாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சண்டீகா் அணி 50 ஓவா்களில் 159/6 ரன்களை சோ்த்தது. புதுவை தரப்பில் தனிஷ்கா சென் 3 விக்கெட்டை வீழ்த்தினாா்.

160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய புதுவை அணி 42.5 ஓவா்களில் 160/3 ரன்களை எடுத்து சண்டீகரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ADVERTISEMENT

ரோஷினி 45, யுவஸ்ரீ 73 ரன்களை விளாசினா். இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் வென்று 20 புள்ளிகளைப் பெற்றுள்ளது புதுவை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT