செய்திகள்

துளிகள்

29th Feb 2020 01:46 AM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கைவிரலில் காயமுற்ால், இனி வரும் டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் பாக். மகளிா் அணி கேப்டன் பிஸ்மா மரூப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

கரோனா வைரஸ் பாதிப்பு எதிராலியாக சீனாவின் ஸியான் நகரில் இருந்து கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் மாா்ச் 27 முதல் 29-ஆம் தேதி வரை பிஷ்கெக்கில் இந்த போட்டி நடைபெறுவதாக இருந்தது.

 

ADVERTISEMENT

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை போட்டி துபைக்கு மாற்றப்பட்ட நிலையில், அதில் இந்திய-பாகிஸ்தான் உள்ளிட்ட இரு அணிகளும் பங்கேற்கும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா். மேலும் மகளிா் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

 

மும்பையில் நடைபெறும் டிஓய் பாட்டில் டி20 போட்டியில் பங்கேற்று ஆடும் இந்திய ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவின் உடல்தகுதி குறித்து தேசிய தோ்வுக் குழுத் தலைவா் எம்எஸ்கே.பிரசாத் ஆய்வு மேற்கொண்டாா்.

 

ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஆரோஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை சிட்டி எஃப்சி. இதன் மூலம் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT