செய்திகள்

ஐபிஎல் போட்டிக்கு முன்பு வங்கதேசத்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய வீரர்கள்!

26th Feb 2020 11:20 AM | எழில்

ADVERTISEMENT

 


ஐபிஎல் போட்டிக்கு முன்பு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இரு டி20 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

வங்கதேசத்தின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மான், 1920-ல் கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தவர். 1971-ல் வங்கதேசம் உருவானபோது புதிய தேசத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு பிரதமராகவும் பணியாற்றியுள்ளார். வங்காளிகளால் வங்கபந்து (வங்காளிகளின் நண்பர்) என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வங்கதேசம். இதன் ஒரு பகுதியாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இரு டி20 ஆட்டங்கள் தாக்காவில் நடைபெறவுள்ளன.

ஆசியா லெவன், உலக லெவன் என இரு அணிகள் மோதவுள்ள டி20 ஆட்டங்களுக்கான அணி விவரங்களின் வெளியிடப்பட்டுள்ளன. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் இத்தகவலை தெரிவித்துள்ளார். உலக லெவன் அணியில் கிறிஸ் கெயில், ரஷித் கான், ஜானி பேர்ஸ்டோவ் போன்ற பிரபல வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, ஷிகர் தவன், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், ஷமி ஆகிய ஐந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். பிஎஸ்எல் டி20 போட்டி நடைபெறுவதால் பாகிஸ்தான் வீரர்கள் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. கோலியும் ராகுலும் இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாட சம்மதித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மார்ச் 4-ல் முடிவடைகிறது. பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடர் இந்தியாவில் மார்ச் 12-ல் தொடங்கி மார்ச் 18-ல் முடிவடைகிறது. தாக்காவில் நடைபெறவுள்ள இரு டி20 ஆட்டங்களும் மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்குகிறது. 

Tags : Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT