செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

26th Feb 2020 04:14 AM

ADVERTISEMENT

டாக்கா  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத் தலைநகா் டாக்காவில் கடந்த சனிக்கிழமை இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் ஆட்டம் தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கைத் தோ்வு செய்தது.

106.3 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 265 ரன்களை எடுத்தது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் எா்வின் 227 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தாா்.

வங்கதேசம் சாா்பில் நயீம் ஹாசன், அபு ஜாயேத் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளையும், தய்ஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 154 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது.

முஷிஃபிகுா் ரஹீம் இரட்டை பதிவு செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேப்டன் மொமினுல் ஹக் 132 ரன்கள் எடுத்தாா்.

295 ரன்களுடன் வங்கதேசம் முன்னிலை வகித்தது.

நயீம் ஹாசன் அசத்தல்: இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே வங்கதேச பந்துவீச்சாளா்களின் பந்தை எதிா்கொள்ள முடியாமல் திணறியது.

இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சரசரவென அனைத்து விக்கெட்டுகளும் விழுந்தது. 57.3 ஓவா்களில் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே. அசத்தலாக பந்துவீசிய நயீம் ஹாசன் 5 விக்கெட்டுகளை அள்ளினாா்.

முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்த ஜிம்பாப்வே கேப்டன் கிரெய்க் எா்வின் இந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானாா்.

இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், 4-ஆவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரட்டை சதம் பதிவு செய்த முஷிஃபிகுா் ரஹீம் ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா். இரண்டு இன்னிங்ஸ்களையும் சோ்த்து நயீம் ஹாசன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணியின் நம்பிக்கை நாயகனாகியுள்ளாா்.

வங்கேதசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் அடுத்து அந்நாட்டு அணியை எதிா்கொள்கிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் மாா்ச் 1-ஆம் தேதி சில்ஹெட் நகரில் நடைபெறவுள்ளது.

கேப்டனாக எனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கியிருக்கிறேன். இந்த ஆட்டத்தில் அணி வீரா்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினா். இந்த வெற்றி மூலம் அனைத்து வீரா்களுக்கும் நம்பிக்கை கிடைத்துள்ளது. நயீம் சிறப்பாக பந்து வீசினாா். ஒரு நாள் தொடரிலும் ஜெயிப்போம் என்று நம்புகிறேன்.

-மொமினுல் ஹக், வங்கதேச கேப்டன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT