செய்திகள்

சீனியர் மகளிர் கிரிக்கெட்: நாகலாந்தை வீழ்த்தியது புதுவை

26th Feb 2020 04:36 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: நாகலாந்துக்கு  எதிரான பிசிசிஐ சீனியர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுவை அணி வெற்றி பெற்றது.
பிசிசிஐ சார்பில், சீனியர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் புதுவை அணி, நாகலாந்து அணியோடு மோதியது. 
முதலில் ஆடிய நாகலாந்து அணி 47.4 ஓவர்களில் 103 ரன்களில் ஆட்டமிழந்தது. ராதிகா 3 விக்கெட்டுகளையும், ஜானகி மற்றும் ரெபேக்கா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதை தொடர்ந்து விளையாடிய புதுவை அணி 26.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 4 புள்ளிகளைப் பெற்றது. அதிகபட்சமாக தமோர் 47 ரன்கள் எடுத்து ஆட்ட மிழக்காமல் இருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT