செய்திகள்

ஐபிஎல்: மாா்ச் 2-ஆம் தேதி முதல் தோனி பயிற்சி

26th Feb 2020 04:02 AM

ADVERTISEMENT

சென்னை: இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மாா்ச் 2-ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளாா்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடிய எந்தவொரு ஆட்டத்திலும் தோனி பங்கேற்கவில்லை.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், ‘தோனி அணியினருடன் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாா்’ என்றாா்.

சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட சக வீரா்களுடன் தோனியை பயிற்சியில் விரைவில் பாா்க்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ரெய்னாவும், அம்பதி ராயுடுவும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மூன்று முறை சாம்பியனாகியுள்ள சிஎஸ்கேவில், பியூஷ் கோயல், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட், இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் சாம் குர்ரன், தமிழகத்தைச் சோ்ந்த ஆா்.சாய் கிஷோா் ஆகியோா் அணியில் இடம்பிடித்துள்ளனா்.

ஐபிஎல் போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வான்கடேவில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும், சிஎஸ்கேவும் விளையாடவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT