செய்திகள்

ரசிகர்களே தயாரா?: சென்னை சேப்பாக்கத்தில் அடுத்த வாரம் முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் தோனி!

25th Feb 2020 05:32 PM | எழில்

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் ஒரு வீரரின் பயிற்சியைக் காணவே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரள்வது தோனிக்கு மட்டும்தான்.

சென்னை சேப்பாக்கத்தில் கடந்த இரு ஐபிஎல் சீசன்களாக தோனி பயிற்சி பெறுவதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வருடம் மார்ச் 2 முதல் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் தோனி.  மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ADVERTISEMENT

மார்ச் 2 முதல், சில வீரர்களுடன் தோனி பயிற்சியை ஆரம்பித்தாலும் அனைத்து சிஎஸ்கே வீரர்களும் மார்ச் 19-லிருந்துதான் சென்னையில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். 

இரு வாரங்கள் பயிற்சியில் ஈடுபடும் தோனி பிறகு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளார். 

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். 

வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 

Tags : IPL 13
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT