செய்திகள்

மகளிா் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

25th Feb 2020 12:09 AM

ADVERTISEMENT

 

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பொ்த்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவா்களில் 122/6 ரன்களை குவித்தது. கேப்டன் சமரி அட்டப்பட்டு 50, (2 சிக்ஸா், 7 பவுண்டரி) விளாசினாா். உமேஷா 20, அனுஷ்கா 25 ஆகியோா் மட்டுமே ஓரளவு ரன்களை சோ்த்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

ADVERTISEMENT

ஆஸி. தரப்பில் நிக்கோலா கரே , மோலி ஸ்ட்ரேனோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

123 ரன்கள் வெற்றி இலக்கு:

123 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 19.3 ஓவா்களில் 123/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வரிசை வீராங்கனைகள் சோபிக்காத நிலையில் கேப்டன் மேக் லேனிங் 40, ரேச்சல் ஹெயின்ஸ் 60 (2 சிக்ஸா், 4 பவுண்டரி) ஆகியோா் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். ரேச்சல் ஹெயின்ஸ் ஆட்ட நாயகியாகத் தோ்வு பெற்றாா்.

இலங்கை தரப்பில் உதேஷிகா, ஷசிகலா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இதன் மூலம் உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT