செய்திகள்

ஆகர் ஹாட்ரிக்கில் ஆஸி. அபாரம்: 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை நசுக்கியது

22nd Feb 2020 09:07 AM

ADVERTISEMENT

 

முதல் டி20யில் அபாரமாக பந்துவீசிய ஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. ஸ்மித் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்களும், ஃபின்ச் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்களும் விளாசினர்.

ADVERTISEMENT

தென்ஆப்பிரிக்க தரப்பில் நீண்ட இடைவேளைக்குப் பின் அணிக்குத் திரும்பிய ஸ்டெயின் மற்றும் ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 14.3 ஓவர்களில் 89 ரன்களுக்குச் சுருண்டு 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இது டி20 போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும் ரன்களின் அடிப்படையில் ஆஸி. அணிக்கு 2ஆவது மிகப்பெரிய வெற்றியாகும்.

அபாரமாக பந்துவீசிய ஆஷ்டன் ஆகர் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உடன் கூடிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மற்றும் 5 விக்கெட்டுகள் சாய்த்த 2ஆவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT