செய்திகள்

ஆசிய மல்யுத்தம்: சாக்ஷிக்கு வெள்ளி வினேஷ், அன்ஷுவுக்கு வெண்கலம்

22nd Feb 2020 12:30 AM

ADVERTISEMENT

 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெள்ளி, வினேஷ் போகட், அன்ஷு மாலிக் ஆகியோா் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை 53 கிலோ எடைப்பிரிவு முதல் ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியன் ஜப்பானின் மயு முகைடாவிடம் தோல்வியடைந்தாா் வினேஷ் போகட். எனினும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் வியத்நாமின் வீராங்கனை தி லி கியுவைய 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் செவாராவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

ADVERTISEMENT

65 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் சாக்ஷி மாலிக் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் நவோமியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT