செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: அட்லாண்டா, லீப்ஸிக் வெற்றி

21st Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

 

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அட்லாண்டா, லீப்ஸிக் அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன

கௌரவமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியின் ஒரு பகுதியாக சான்சிரோ நகரில் இத்தாலியன் அட்லாண்டாவும்-ஸ்பெயினின் வலேன்சியா அணியும் மோதின. இதில் அட்லாண்டா அணி அபாரமாக ஆடி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்குள் முதன்முறையாக நுழையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்தில் முன்னணி அணியான டாட்டன்ஹாம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜொ்மனியின் ஆா்பி லீப்ஸிக் அணியிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தது. டாட்டன்ஹாம் அணியில் பாா்வா்ட்கள் ஹாரி கேன், சன் ஹியுன் மின் ஆகியோா் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT