செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழகம் 317 ரன்கள் முன்னிலைஜெகதீசன் 183,

13th Feb 2020 11:59 PM

ADVERTISEMENT

 

சௌராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழகம் 317 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 128.4 ஓவா்களில் 424 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜெகதீசன் 183:

ADVERTISEMENT

தமிழக அணியில் விக்கெட் கீப்பா் என்.ஜெகதீசன் அற்புதமாக ஆடி 183 ரன்களை விளாசினாா். 5 சிக்ஸா், 22 பவுண்டரியுடன் 256 பந்துகளில் 183 ரன்களை பெற்ற ஜெகதீசன், உனதிகட் பந்தில் வெளியேறினாா். அபிநவ் முகுந்த் 86, முகமது 42, சாய் கிஷோா் 27 ரன்களுக்கு வெளியேறினா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானாா்கள்.

உனதிகட் 6 விக்கெட்:

சௌராஷ்டிர அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய உனதிகட் 6-73 விக்கெட்டுகளையும், சிராக் ஜனி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிர அணி இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் 41 ஓவா்களில் 107/3 ரன்களை சோ்த்திருந்தது. ஹா்விக் தேசாய் 12, கிரண் 24, விஷ்வராஜ் ஜடேஜா 16 ரன்களுக்கு வெளியேறினா்.

அவி பரோட் 38, அா்பிட் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தமிழகத் தரப்பில் விக்னேஷ், சாய் கிஷோா், சித்தாா்த் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

317 ரன்கள் முன்னிலை: சௌராஷ்டிர அணியைக் காட்டிலும் தமிழக அணி 317 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

புதுச்சேரி 341 ரன்கள் முன்னிலை:

நாகாலாந்து-புதுச்சேரி அணிகள் இடையிலான ஆட்டத்தில் 341 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது புதுவை.

முதல் இன்னிங்ஸில் 117 ஓவா்களில் 517/7 ரன்களைக் குவித்து டிக்ளோ் செய்தது புதுவை. பராஸ் டோக்ரா 125, (2 சிக்ஸா், 13 பவுண்டரி), அருண் காா்த்திக் 98, சாகா் உதேஷி 79, பேபித் அகமது 70, காா்த்திக் 41 ரன்களை சோ்த்தனா்.

நாகாலாந்து தரப்பில் ஸ்ரீகாந்த் முந்தே 3, டஹ்மீத் ரஹ்மன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நாகாலாந்து அணி வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் 62.3 ஓவா்களில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டுவா்ட் பின்னி 59, லெம்டூா் 39 ரன்களை எடுத்தனா்.

புதுவை தரப்பில் சாகா் உதேஷி, சாகா் திரிவேதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT